Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி..! நீதிமன்ற கேள்விக்கு பணிந்தாரா..?

Senthil Velan
திங்கள், 12 பிப்ரவரி 2024 (21:42 IST)
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
 
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர்.  புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 19-வது முறையாக நீட்டிக்கப்பட்டது.
 
230 நாட்களுக்கும் மேலாக  சென்னை புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
 
இதனிடையே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி  ஆனந்த வெங்கடேஷ்,  கடை நிலை ஊழியர் ஒருவர், 48 மணி நேரம் சிறையில் இருந்தால் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார். ஆனால், 230 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக நீடிக்க அனுமதிப்பதன் மூலம் மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள் என கேள்வி எழுப்பி இருந்தார்.

ALSO READ: நீக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட ஆளுநர்..! சட்டசபை விதியை மீறியதால் உச்சகட்ட பரபரப்பு..!
 
இந்நிலையில் தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் தனது ராஜினாமா கடிதத்தை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு செந்தில் பாலாஜி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு! - கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை குவிந்த மக்கள்

தாராவியை அதானிக்கு தாரை வார்த்து விட்டீர்கள்- மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்..!

முல்லை பெரியாற்று அணையை கண்காணிக்க கேரள பொறியாளர்களா? அன்புமணி ஆவேசம்

தாமிரபரணி வெள்ளத்தை வேடிக்கை பார்க்க்கும் பொதுமக்கள்.. செல்பி வேண்டாம் என எச்சரிக்கை..!

அரசு மருத்துவமனையில் எலி கடித்து 10 வயது சிறுவன் பலி? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments