Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கூவத்தூர் பழனிச்சாமி மாமியார் வீட்டுக்கு செல்வார்: செந்தில் பாலாஜி விளாசல்!

கூவத்தூர் பழனிச்சாமி மாமியார் வீட்டுக்கு செல்வார்: செந்தில் பாலாஜி விளாசல்!
, சனி, 20 ஜனவரி 2018 (16:08 IST)
தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு வீட்டுக்கு செல்லும் எனவும், எடப்பாடி பழனிச்சாமி மாமியார் வீட்டுக்கு செல்வார் எனவும் கூறியுள்ளார் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ செந்தில் பாலாஜி.
 
முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி தொகுதியின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி டிடிவி தினகரன் அணியில் உள்ளார். இவர் எடப்பாடி பழனிச்சாமி அரசை கடுமையாக சாடியுள்ளார். போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டதை குற்றம்சாடியுள்ளார்.
 
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, அதிமுக அம்மா அணி என்ற பெயரில் செயல்பட எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறினார். மேலும் சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும்போது நடைபெறும் வாக்கெடுப்பின் போது, கூவத்தூர் பழனிச்சாமி அரசு வீட்டுக்கு செல்லும். பழனிச்சாமி மாமியார் வீட்டுக்கு செல்வார் என்றார்.
 
தொடர்ந்து பேசிய செந்தில் பாலாஜி பஸ் டிக்கெட்டுகளின் விலை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போதுமான நிதியை போக்குவரத்து துறைக்கு அரசு ஒதுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைமை ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மாணவன்