Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி ஆற்று படுகையில் கொட்டகை: வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2023 (20:50 IST)
குளித்தலை காவேரி ஆற்றுப்படுகையில்  தற்காலிக சுடுகாடு கொட்டகை அமைத்த அப்பகுதி பொதுமக்களை வனத்துறை அதிகாரிகள் கொட்டகையை தாங்களாகவே அகற்றி கொள்ள வேண்டும்.இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய வனத்துறை அதிகாரிகளால் பொதுமக்கள் அதிர்ச்சி. 
 
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இதில் வார்டு 1 மணத்தட்டை. அக்ரஹாரம்,வார்டு 2 சங்கிலியாண்ட புரம், வார்டு 3 தேவதானம், உள்தேவதானம் ஆகிய மூன்று வார்டுகளில் உள்ள அனைத்து சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இறந்த பிரேதங்களை மணத்தட்டை காவிரி ஆற்று படுகையில் ஏரியூட்டுவதும்,புதைப்பதும் பல ஆண்டுகளாக தொடர்ந்து பழக்கத்தில் இருந்து வருகிறது.
 
இந்நிலையில் மூன்று வார்டு பொதுமக்கள் இறந்த பிரேதங்களை மழை காலங்களில் எரியூட்டுவதில் பல்வேறு சிக்கல்கள்,இடையூறுகள் இருந்து வந்துள்ளது இப்பகுதி பொதுமக்கள் வனத்துறை,நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் சுடுகாடு கொட்டகை நிரந்தரமாக அமைக்க கோரிக்கை மனு அளித்திருந்தனர்
 
அதன் பேரில் அதிகாரிகள் தற்காலிகமாக கொட்டகை அமைத்து கொள்ள வாய்மொழி உத்தரவு வழங்கினார். அதனடிப்படையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நகராட்சி 1 வது வார்டு  மற்றும் 3வது வார்டு பொதுமக்கள் தங்கள் சொந்த செலவில்  சுடுகாடு கொட்டகையானது தற்காலிகமாக அமைக்கப்பட்டது.   
 
தற்போது இப்பகுதியில் வனத்துறை அதிகாரியாக பணியில் இருந்து வந்த கருணாநிதி மற்றும் பிரபாகரன் இருவரும் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உங்களுக்கு தற்காலிக கொட்டகையோ அல்லது நிரந்தரமான கொட்டகை அமைக்க வனத்துறையில் அனுமதி கொடுக்கப்படவில்லை. ஆகவே புதியதாக போடப்பட்ட தற்காலிக கொட்டகையை தாங்களாக அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கை செய்தார்.மேலும் பொதுமக்கள் உங்களது கோரிக்கையை முறையாக எங்கள் உயர் அதிகாரியிடம் மனுக்களாக கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் தற்காலிக கொட்டகையின் மேல் கூரைகள் மட்டும் அகற்றி கொள்ளப்பட்டது
 
இந்நிலையில் இன்று வயது முதிர்வால் உயிரிழந்த சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது பிரேதத்தை திறந்தவெளியில் உள்ள கொட்டகையில் ஏரியூட்டப்பட்டது . இப்பகுதி அனைத்து சமூகத்தினரும் பயன்படுத்தப்படும் இந்த சுடுகாட்டு கொட்டகைக்கு வனத்துறை அதிகாரிகள் நிரந்தரமாக கொட்டகை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .மேலும் தற்பொழுது மழைக்காலம் என்பதால் பிரேதங்களை எரிவூட்ட முடியாத நிலை ஏற்படுகிறது எனவே வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments