Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்னி விளக்கால் தீப்பிடித்த வீடு : இருவர் பலி : ஊரே சோகம்

Webdunia
சனி, 15 டிசம்பர் 2018 (16:25 IST)
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வசித்து வந்தவர் நத்தீஸ்வரன். இவர் கட்டிட தொழிலாளியாக இருக்கிறார். இவருக்கு சரஸ்வதி( 23) என்ற மனையும் தனலட்சுமி (2) மகளும் உள்ளனர். இவர் வீட்டில் மின்சார வசதி இல்லாத காரணத்தால் இரவில் குத்து விளக்குகள் ஏற்றி வைப்பது வழக்கம்.
நேற்று நந்தீஸ்வரன் வீட்டிற்கு அருகே உள்ள பக்கத்துவீட்டில்  அறையில் இருந்தார். இவரது மனைவியும் குழந்தையும் வீட்டில் படுத்திருந்தனர்.
 
இந்நிலையில் இரவு வேளையில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் திடீரென்று விளக்கிலிருந்த தீ குட்டிசையில் பற்றத் தொடங்கியது.
 
அதனைத் தொடர்ந்து தீ குடிசை முழுவதும் பரவியது. இதில் தாய் மற்றும் குழந்தை இருவரும் மாட்டிக் கொண்டனர். இருவரும் வெளியே வரமுடியாதபடி தீ சூழ்ந்ததால் சரஸ்வதி தீயிலேயே கருகி இறந்துவிட்டார். குழந்தை 90 சதவீத காயங்களுடன் மீட்கப்பட்டது.
 
இதனையடுத்து வாணியம்பாடி  அரசு மருத்துவமனையில் குழ்ந்தை சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சமயம் நள்ளிரவில் உயிரிழந்தது.
 
இச்சம்பவம் தொடர்பாக அம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகின்றன.
 
 வாணியம்பாடி பகுதியில் தாயும் குழந்தையும் தீயில் கருகி பலியான சம்பவம் அப்பகுதில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments