அண்ணன் ட்யூட்டியில்..! அண்ணியிடம் சில்மிஷம் செய்த தம்பி!?- அண்ணி குடும்பத்தார் செய்த செயல்!

Prasanth K
வியாழன், 19 ஜூன் 2025 (09:13 IST)

திண்டுக்கல் மாவட்டத்தில் தனியாக இருந்த அண்ணிக்கு தொல்லைக் கொடுத்து வந்த கொழுந்தனை குடும்பமே சேர்ந்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் பாறையூரை சேர்ந்தவர் முருகன். இவருக்கு திருமணமாகி கோமதி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். முருகன் கோவையில் ராணுவ முகாமில் பணியாற்றி வருகிறார். இவரது தம்பி ஜோதிமணி ஊரிலேயே கூலி வேலை செய்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் ஜோதிமணி தனது அண்ணன் மனைவியான கோமதியிடம் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தொடர் தொல்லைகள் அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோமதி தனது பெற்றோரிடம் கூறியுள்ளனர். அதை தொடர்ந்து கோமதி, அவரது தந்தை, தாய், தங்கை மற்றும் தங்கை கணவன் அனைவரும் சேர்ந்து ஜோதிமணிக்கு உணவில் தூக்க மாத்திரைகளை கலந்துக் கொடுத்துள்ளனர்.

 

இதனால் ஜோதிமணி மயங்கியதும் கை, கால்களை கட்டி பாறையூரில் உள்ள தனியார் பகுதியில் உள்ள கிணற்றில் வீசியுள்ளனர். இதில் ஜோதிமணி பலியான நிலையில் பிணத்தை கண்டெடுத்த போலீஸார் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டபோது மேற்கூரிய சம்பவங்கள் தெரிய வந்துள்ளது. 

 

அதை தொடர்ந்து ஜோதிமணியை திட்டமிட்டு கொன்ற வழக்கில் கோமதி உள்பட 6 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கத்தியால் கிழித்தனர், எலும்பு முறிவுகளும் ஏற்பட்டது: கரூர் துயர சம்பவத்தை நேரில் கண்ட பெண்மணி வாக்குமூலம்

இளம்பெண்ணை கற்பழித்த காவலர்கள்.. இந்த வெட்கக்கேடான நிலைக்கு பொம்மை முதல்வரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும். ஈபிஎஸ்

அக்டோபர் 3, வெள்ளிக்கிழமையும் பொது விடுமுறையா? தமிழக அரசு பரிசீலனை..!

ஆர்சிபி அணி விற்பனைக்கு வருகிறதா? ஐபிஎல் அரங்கில் பெரும் பரபரப்பு!

ரூ.35 கோடி மதிப்புள்ள போதைபொருளுடன் பிரபல நடிகர் கைது.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments