Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்டாலின் பெயரில் போலி ட்விட் – தேர்தல் உத்தியா ?

Advertiesment
திமுக
, சனி, 9 பிப்ரவரி 2019 (09:21 IST)
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் சில மர்ம நபர்கள் திமுக வுக்கு எதிராகவும் ஸ்டாலினுக்கு எதிராகவும் போலியான கருத்துகளைப் பரப்பி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆகியோர் போலவே போலிக் கணக்குகளை பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கலில் பரப்பும் விஷமத் தனம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் பெயரில் ’ கோயிலுக்கு செல்லும் யாரும் திமுகவிற்கு வாக்களிக்கத் தேவையில்லை. அப்படி கோயிலுக்கு செல்வோர் வாக்களித்துதான் வெற்றிபெற வேண்டும் என்றால் அப்படிப்பட்ட வெற்றி தேவையில்லை’ என்ற ஒரு ஒரு டிவிட்டின் ஸ்கீரின் ஷாட் சமூக வலைதளங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பரவியது.

அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த திமுக வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தனர். ஸ்டாலினும் தனிப்பட்ட முறையில் இது குறித்துப் புகார் அளித்தார். இந்த டிவிட் போலியானது எனத் தெரிந்தும் சில தனிநபர்கள் அல்லது அமைப்புகள் ஸ்டாலின் இந்துக்களுக்கும் இந்து மதத்திற்கும் எதிரானவர் என்றக் கூற்றைப் பரப்பி வருகின்றனர்.
திமுக

இப்போது தேர்தல் நெருங்கி வருவதால் இந்து மதத்தின் மேல் நம்பிக்கை வைத்துள்ள மக்களின் வாக்குகளை திமுக வுக்கு செல்ல விடாமல் தடுக்க மீண்டும் இது போன்ற பொய்யானக் கருத்துகளை பரப்பி வருகின்றனர். மேலும் திமுக வுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யவும் மக்களைக் கோவிலுக்கு செல்ல வலியுறுத்தியும் கோ டு டெம்ப்பிள் (go to temple) என்ற வாசகம் பொறித்த டி ஷர்ட்டுகளையும் விநியோகிக்க முடிவு செய்துள்ளனர். இந்தத் தேர்தல் நேரத்தில் அந்த டி ஷர்ட் பொறித்த இளைஞர்களை அதிகமாகக் காணலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரசவத்தின் போது கை தவறி விழுந்த குழந்தை பலி: கோவையில் அதிர்ச்சி