Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்கூட்டியே துவங்கிய பருவமழை - தமிழகத்திற்கு கூடுதல் மழையா?

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (12:25 IST)
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கியதால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கூடுதல் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்ற நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்தது. அதன்படி கடந்த 15 ஆம் தேதி அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.
 
இதன் காரணமாக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள பகுதிகளில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் இன்னும் ஒரு சில நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதனைத்தொடர்ந்து வருகிற 27 ஆம் தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிக மழை பெய்யும். 
 
தற்போது பருவ மழை முன்கூட்டியே தொடங்குவதால் குமரி மாவட்டம் உள்பட நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கூடுதல் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்: அதிஷி தேர்வுக்கு ஆம் ஆத்மி பெண் எம்பி எதிர்ப்பு..!

நிபா வைரஸ் பரவல் எதிரொலி.! தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!!

அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் டெல்லி முதல்வராக்குவேன்: அதிஷி சபதம்..!

பெரியார் நினைவிடத்திற்கு நேரில் சென்ற விஜய்.. மாலை தூவி மரியாதை..!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டிற்கு சென்றது ஏன்.? பிரதமர் மோடி விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments