ஆயுத பூஜை எதிரொலி: சுவிதா சிறப்பு ரயிலில் 3 மடங்கு கட்டண உயர்வு; அதிர்ச்சியில் பொதுமக்கள்

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (12:17 IST)
ஆயுதபூஜையையொட்டி இயக்கப்படும் சுவிதா சிறப்பு ரயிலின் கட்டண உயர்வால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
 
பண்டிகை நாட்களில் சுவிதா சிறப்பு ரயில்கள் சில மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களுக்கு பிளக்ஸி முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
 
இந்நிலையில் வரும் ஆயுத பூஜையை முன்னிட்டு திருநெல்வேலிக்கு இயக்கப்படும் சுவிதா சிறப்பு ரயிலில் மும்மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். அதன்படி திருநெல்வேலிக்கு ஸ்லீப்பர் கோச் டிக்கெட் ரூ.1,275 ஆகவும், 3-ம் வகுப்பு ஏசியில் ஒரு டிக்கெட் ரூ.3,655ஆகவும், 2-ம் வகுப்பு ஏசியில் ஒரு டிக்கெட் ரூ.5,175 எனவும் வசூலிக்கப்பட்டுள்ளன.
 
சாதாரணமாக சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயில்களில் ஸ்லீப்பர் கோச் டிக்கெட் விலை ரூ.385 தான். ஆனால் அது மும்மடங்கு உயர்ந்துள்ளது. இப்படி இருந்தால் எப்படி நடுத்தர மக்கள் ரயில் சேவையை பயன்படுத்துவது என மக்கள் வேதனையுடன் தங்கள் குமுறல்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் போராட்டம்!.. ராகுல் கைது!. ஜனநாயகன் வசூலுக்காகவே மௌனம் காக்கிறாரா விஜய்?...

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்.. விவாதம் நடத்த தயார்... அமைச்சர் கிரண் ரிஜிஜு

பாமக தலைவராக தன்னை அறிவிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு.. வாபஸ் பெற்றார் டாக்டர் ராமதாஸ்..

இடைத்தேர்தலில் களமிறங்குகிறாரா கனிமொழி? விஜய்யின் பெண் வாக்காளர்களை இழுக்க முயற்சியா?

எங்கள் டைமை வேஸ்ட் செய்யாதீர்கள்.. டெல்லி மாணவர்கள் மீதான தடியடி வழக்கில் நீதிமன்றம் கண்டிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments