Publish Date: Tue, 20 Oct 2026 (12:18 IST)
Updated Date: Tue, 20 Oct 2026 (12:19 IST)
சனி, ஞாயிறு மற்றும் ஆயுத பூஜை விடுமுறை 2 நாட்கள் என 4 நாட்கள் தொடர்விடுமுறை வந்ததால் சென்னையிலிருந்து பலரும் தங்களின் சொந்த ஊருக்கு சென்றனர். அவர்கள் இன்று இரவு சென்னை திரும்பவுள்ளனர். அவர்கள் அரசு பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள் அல்லது ரயில் மூலம் சென்னைக்கு திரும்புகிறார்கள். இந்நிலையில், சென்னைக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
காரைக்குடியிலிருந்து தாம்பரத்திற்கு இன்று இரவு 10 மணிக்கு 11 முன்பதிவில்லா பெட்டிகள் இயக்கப்படுகிறது. பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகூர், பேரளம் வழியாக அந்த ரயில் செல்லும். அதேபோல், முன்பதிவில்லா மெமு ரயில்களும் இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூரிலிருந்து திருச்சிக்கு காலை 11.15 மணிக்கு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் தஞ்சாவூர், கும்பகோணம், சீர்காழி வழியாக சென்றது..
அதேபோல், திருச்சியிலிருந்து - சென்னை எழும்பூருக்கு இன்று இரவு 10.45 மணிக்கு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தஞ்சாவூர், கும்பகோணம், சீர்காழி வழியாக செல்கிறது.
அதேபோல் மானா மதுரையிலிருந்து - சென்னை தாம்பரத்திற்கு இன்று பகல் 2.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருப்பவனம், மதுரை, மணப்பாறை, திருச்சி வழியாக செல்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க