இந்தியாவை உலுக்கி எடுத்துள்ளது நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்துள்ள விவகாரம் தான். இந்நிலையில் இந்த ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் ஒரு மாணவியை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மாவட்ட மருத்துவக் கல்லூரில் படித்தது தொடர்பான வழக்கில் மாணவன் உதித்சூர்யா இதற்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன், சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த ராகுல் அவரது தந்தை டேவிஸ் ஆகியோர் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இவ்வழக்கில் பல முக்கிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ள நிலையில் காஞ்சிபுரம் சவிதா மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தேனி சிபிசிஐடி போலீஸார், வழக்கறிஞரின் மகளான அம்மாணவியை கைது செய்து தேனி மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது அம்மாணவி திடீரென அழத்தொடங்கினா. அதனால் அங்கி பரபரப்பு ஏற்பட்டது. இந்த விசாரணையில் பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.