Publish Date: Fri, 24 Aug 2018 (12:24 IST)
Updated Date: Fri, 24 Aug 2018 (12:43 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பஜனை பாடல் பாடியதற்கு செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் மறைவுக்கு பின் தினந்தோறும் அவரின் சமாதிக்கு சென்று திமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பலரும் மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
அப்போது, எங்கள் தலைவரே.. தங்கத் தலைவரே என அவர்கள் வாத்தியங்கள் இசைத்து பாடல்களை பாடினர். பாடல்களை பாடியதோடு மட்டும் நிறுத்தாமல், ஒரு கட்டத்தில் ஓவரா பரவசமான வேலுவும், திமுக தொண்டர்களும் டான்ஸ் ஆட தொடங்கினர். இது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு ஆளானது.
இதனால் கடுப்பான திமுக செயல் தலைவர் ஸ்டாலின், வேலுவை அழைத்து ஒருத்தன் என்னன்னா பிரியாணிய வச்சு கட்சி பேர கெடுத்தான், நீங்க என்னன்னா பாட்டுபாடி, டான்ஸ் ஆடி பேர கெடுக்கிறீங்க என வேலுவிடம் ஸ்டாலின் கடிந்து பேசியுள்ளார். இதனால் வேலு பயங்கர அப்செட் ஆகியுள்ளார்.