திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வோம்.. வெல்வோம் என்ற பரப்புரையை கடந்த 2ஆம் தேதி ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடரின் அறிவிப்பு காரணமாக இந்த நிகழ்ச்சியை அவர் ஒத்தி வைத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்றுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு வந்த நிலையில் இன்று கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புலிவலம் ஊராட்சியில் திமுகவின் ஊராட்சி சபைக் கூட்டம் தொடங்கியது. ‘மக்களிடம் செல்வோம்’ என்பதை முன்னிறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தில் பேசியதாவது:
கிராமங்களே கோவில், தற்போது கோவிலுக்கு வந்ததை போல் உணர்கிறேன். பழைய காலத்தில் குடவோலை முறையில்தான் மக்கள் பிரதிநிதிகள் தேர்வுசெய்யப்பட்டனர். முந்தய காலத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்தெடுக்கும் குடவோலை முறைக்கான சான்றுகள் இப்போது அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டத்திலும் கலைஞர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் இருக்கிறது. இதுவே மிகப்பொருத்தம்.
மக்கள் விரோத அதிமுக - பாஜக அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் இது!
மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே எம்பி, எம் எல் ஏக்கள் தேர்வுசெய்யப்படுகின்றனர் இவ்வாறு ஸ்டாலின் பேசி வருகிறார்.