பேரறிஞர் அண்ணாவின் 111 ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு நடைபெறும் மதிமுக மாநாட்டில், மு.க.ஸ்டாலின் வைகோவை திராவிட இயக்கத்தின் நிரந்தர போர்வாள் என புகழ்ந்து கூறியுள்ளார்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மறைந்த பேரறிஞர் அண்ணாவின் 111 ஆவது பிறந்த தினம் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக நீதி காவலர் என போற்றப்படுகிற பெரியார் ஈ.வே.ராமசாமியின் வழித்தோன்றலாக கருதப்படுபவர் பேரறிஞர் அண்ணா. தமிழகத்தின் திராவிட அரசியலின் மிக முக்கிய செயற்பாட்டாளராக திகழ்ந்தவர். பேரறிஞர் அண்ணா பல திரைப்படங்களுக்கு வசனங்களும் எழுதியுள்ளார்.
இவரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் மதிமுக மாநாட்டில் சிறப்பு விருந்தினராக திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துக்கொண்டார். பிறகு மாநாட்டில் பேசிய ஸ்டாலின், ”திராவிட இயக்கத்தி நான் எப்படி நிரந்தர தளபதியோ, அதே போல் திராவிட இயக்கத்தின் நிரந்தர போர்வாள் வைகோ தான்” என புகழந்து கூறியுள்ளார். மேலும் நீர் அடித்து நீர் விலகுவது போல் நாம் ஒன்றாகி உள்ளோம் எனவும் கூறியுள்ளார்.