Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் போராட்டம் நடத்தும் ஸ்டாலின் – யாகம் நடத்தும் எடப்பாடியார்

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (20:36 IST)
தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சினை நாளாக நாளாக மோசமாகி கொண்டே போகிறது. ஒவ்வொரு நாள் காலையும் மக்களுக்கு பெரும் போராட்டமாகவே விடிகிறது. ஒவ்வொரு நாள் இரவும் நாளைக்கு தண்னீர் கிடைக்குமா என்ற கேள்வியோடே முடிகிறது.

இந்நிலையில் தமிழகமெங்கும் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டசபையில் பேசினார். அடுத்த கட்டமாக மழை பெய்ய வேண்டி அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் யாகம் நடத்த சொல்லி மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக அதிமுக சார்பில் சென்னையில் காசி விஸ்வநாதர் கோவிலில் நடைபெற உள்ள யாகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில்தான் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையை சரிசெய்ய வலியுறுத்தி எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் போராட்டம் நடக்கும் என தெரிவித்துள்ளார். ஸ்டாலினின் போராட்டம் என்னும் ஆயுதத்திற்கு எதிராக மக்களை திசைதிருப்ப செண்டிமெண்டலாக பக்தியின் என்னும் ஆயுதத்தை எடப்பாடியார் கையிலெடுத்திருக்கிறார் என கூறப்படுகிறது.

ஒரே நாளில் ஒரு பக்கம் தண்ணீருக்கு போராட்டமும், மறுபக்கம் மழை வேண்டி யாகமும் நடைபெறுவது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. என்ன செய்தாலும் மக்களிடம் எஞ்சி நிற்கும் ஒரே கேள்வி ‘எப்போ தண்ணீர் கிடைக்கு?’ என்பதாகதான் இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments