Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பூங்காவில் விளையாடிய சிறுமியை கடித்து குதறிய நாய்கள்.. நாய்கள் உரிமையாளர் கைது..!

Siva
திங்கள், 6 மே 2024 (08:59 IST)
சென்னையில் பூங்காவில் விளையாடிய சிறுமியை நாய்கள் கடித்து குதறியதை அடுத்து நாய்களின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை இரண்டு நாய்கள் கடித்து குதறியதால்  சிறுமி பலத்த காயம் அடைந்த நிலையில் நாய்களின் உரிமையாளர் புகழேந்தி என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும் சிறுமியை காப்பாற்ற சென்ற அவரது தாயார் சோனியாவையும்  நாய்கள் கடித்ததால் சோனியா மற்றும் அவரது மகள் ஆகிய இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் நாய்கள் கடித்ததால் தலையில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுமியின் சிகிச்சை செலவை ஏற்பதாக நாய்களின் உரிமையாளர் புகழேந்தி கூறிய படுகாயம் அடங்க சிறுமி தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

சென்னையில் வளர்ப்பு நாய்கள் கடித்ததில் 5 வயது சிறுமி பலத்த காயமடைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நாய்களின் உரிமையாளர்கள் நாய்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் நாய்களால் பிரச்சனை ஏற்பட்டால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? முடியாது: உச்சநீதிமன்றம்

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments