தேனி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதித்த மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பல பகுதிகளிலும் மழை பெய்து வரும் நிலையில் டெங்கு பரவும் அபாயம் எழுந்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த 5ம் வகுப்பு படிக்கும் மாணவன் சில நாட்களுக்கு முன்னதாக டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உடல்நிலை மோசமடைந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் தற்போது மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் சங்கரமூர்த்திபட்டியை சேர்ந்த மேலும் 5 சிறுவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சலால் மாணவன் பலியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K