Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

திருவள்ளூரில் ஒரு சாட்டை சமுத்திரக்கனி ஆசிரியர் : நெகிழ்ச்சி சம்பவம்

திருவள்ளூரில் ஒரு சாட்டை சமுத்திரக்கனி ஆசிரியர் : நெகிழ்ச்சி சம்பவம்
, வியாழன், 21 ஜூன் 2018 (08:49 IST)
பணியிட மாற்றம் பெற்று செல்லவிருந்த ஆசிரியை மாணவ, மாணவியர்கள் கட்டிப்பிடித்து அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
திருவள்ளூரை அடுத்துள்ள வெளியகரம் அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தவர் பகவான். 300க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகள் படிக்கும் இந்த அரசு பள்ளிக்கு இவர் 5 வருடங்களுக்கு முன் பணிக்கு வந்தார். மாணவர்களுடன் சகஜமாக பழகுவது, புரிந்து கொள்ளும் வகையில் சுலபமாக சொல்லிக்கொடுப்பது, அணுகுமுறை, வழிநடத்துதல், கண்ணியமான நடத்தை போன்றவை காரணமாக அவரை மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பிடித்துபோனது.
 
இந்நிலையில், அவருக்கு பணியிட  மாறுதல் கிடைத்தது. அதற்கான ஆர்டரை பெற அவர் நேற்று பள்ளிக்கு வந்தார். இதை அறிந்த பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு ஓடிவந்து எங்களை வீட்டும், இந்த பள்ளியை வீட்டும் போகாதீர்கள் சார்.. என அவரைக் கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தனர். அவர்களுக்கு சமாதானம் கூறிய ஆசிரியர் பகவான் ஒரு கட்டத்தில் அவரும் கண்ணீர் விட்டு அழுதார். 
 
இதனால் அவரால் அங்கிருந்து செல்ல முடியவில்லை. மற்ற ஆசிரியர்கள் சமாதானம் செய்தும் அதை மாணவர்கள் ஏற்கவில்லை. அதன்பின் வேறு வழியில்லாமல் போலீசார் வரவழைக்கப்பட்டு மாணவர்களை சமாதனம் செய்து ஆசிரியை வெளியே அழைத்து சென்றனர்.
 
இயக்கனரும், நடிகருமான சமுத்திரக்கனி நடித்த சாட்டை எனும் படத்திலும் இப்படி ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். அது போன்ற நெகிழ்ச்சியை சம்பவம் தற்போது நிஜத்திலும் நடந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீரப்பனை பிடித்த விஜயகுமாருக்கு காஷ்மீரில் முக்கிய பதவி