சுஜித் சடலத்தை கல்லறையில் அடக்கம் செய்தபோது, ஒருவர் செல்ஃபி எடுத்த புகைப்படம் சிக்கியுள்ளது.
உலகம் முழுவதும் மக்களின் கைகளில் ஸ்மார்ட்ஃபோன் வந்ததிலிருந்து செல்ஃபி மோகம் பிடித்துகொண்டது அனைவரும் அறிந்ததே. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் தான் பங்கேற்றதற்குரிய அடையாளமாக செல்ஃபி எடுத்துக் கொள்வது வழக்கமாகி வருகிறது. நிலை இப்படி இருக்க சமீபத்தில் திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தை 80 மணி நேரப்போராட்டத்திற்கு பிறகு இன்று காலை 4 மணி அளவில் சடலத்துடன் மீட்கப்பட்டான்.
இதனையடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு சுஜித்தின் சடலத்தை கிருஸ்துவ முறைப்படி, நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே சுஜித்தின் சடலத்தை நல்லடக்கம் செய்து கொண்டிருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் செல்ஃபி எடுத்த காட்சி சிக்கியுள்ளது.
சுஜித் மரணத்தால் இந்தியாவே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், இவ்வாறு துக்க நிகழ்வுகளில் செல்ஃபி எடுத்துக் கொள்வது அந்த இடத்திற்கான மரியாதையை உதாசீனப்படுத்துவது போல் உள்ளது.