Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடைக்கானலில் தொடங்கும் “கோடை விழா”! – தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (09:50 IST)
ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் கொடைக்கானலில் கோடை விழா கொண்டாடப்படும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தமிழ்நாட்டின் மிக முக்கியமான கோடைக்கால சுற்றுலா தளங்களில் கொடைக்கானலும் ஒன்று. தற்போது கோடைக்கால சீசன் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கொடைக்கானல் நோக்கி பயணித்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் கொடைக்கானலில் கோடை விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை காண சுற்றுலா பயணிகள் பலரும் கொடைக்கானல் செல்வது வழக்கம். இந்த ஆண்டு கோடை விழா மே 24ம் தேதி தொடங்கி ஜூன் 2 வரை 10 நாட்களுக்கு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

கோடை விழாவை கொண்டாடும் வகையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி கோவிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: 24 மணி நேரம் காத்திருப்பு..!

பிளீச்சிங் பவுடருக்கு பதில் சுண்ணாம்பு தெளிக்கப்பட்டதா? சென்னை மேயர் ப்ரியா விளக்கம்..!

இதெல்லாம் ஓவரா இல்ல..? டைனோசர் தோலில் பேக் செய்து விற்பனை!?

ஜேஇஇ மெயின் தேர்வுக்கு இன்று கடைசி தேதி.. விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்தல்..!

பாகிஸ்தானியர்கள் வெளியேற காலக்கெடு முடிந்தது.. இனி கண்டுபிடிக்கப்பட்டால் கைது?

அடுத்த கட்டுரையில்
Show comments