Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் வழக்கு: இறுதீர்ப்பை வழங்கும் உச்சநீதிமன்றம்!!!

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2019 (09:33 IST)
ஸ்டெர்லைட் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்திருக்கும் நிலையில் இன்று உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்க உள்ளது.
 
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும் கழிவுகள் காரணமாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என மக்கள் போராட்டம் நடந்தபோது கலவரம் ஏற்பட்டு, 13 அப்பாவி பொதுமக்கள் போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்டனர். 
 
இதனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. அதன்படி ஆலையும் மூடப்பட்டது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த தேசிய பசுமை தீர்ப்பாயம்,  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டது.  இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
 
இதுகுறித்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பாகவும், தமிழக அரசு சார்பாகவும் உச்சநீதிமன்றத்தில் வாதங்கள் நடைபெற்று வந்தது. இரு தரப்பின் வாதங்களும் முடிவடைந்த நிலையில், ஸ்டெர்லைட் வழக்கின் இறுதி தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் வழங்க உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments