Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களை இழிவாக பேசிய எஸ்.வி. சேகர் தலைமறைவு?

Webdunia
ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (09:01 IST)
பெண்களை இழிவாக பேசிய நடிகர் எஸ்.வி. சேகர் மீது காவல் துறையினர் 4 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவர்  தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது முகநூலில் பதிவு செய்திருந்த எஸ்.வி.சேகருக்கு ஆளும் கட்சி அமைச்சர்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.எஸ்.வி.சேகர் வீடு முன்பும், பாஜக அலுவலகமான கமலாலயம் முன்பும் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். 
 
இதனையடுத்து நடிகர் எஸ்.வி.சேகர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், யாரையும் காயப்படுத்தும் எண்ணம் தனக்கில்லை என அவர் பேசினார்.
 
எஸ்.வி.சேகர் மீது புகார் கொடுத்தால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து பத்திரிகையாளர் பாதுகாப்பு நல சங்கத்தினரின் புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் எஸ்.வி. சேகர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
 
மேலும் அவர் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டு வந்த நிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அவர் தலைமறைவு குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments