Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருளில் மூழ்கிய தாம்பரம் பகுதி: காரணம் என்ன?

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2019 (21:15 IST)
சென்னை அருகே உள்ள தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சிலமணி நேரமாக மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியிருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதியில் உள்ளனர். கோடை காலம் தொடங்கிவிட்டதை அடுத்து மின்சாரம் இல்லாமல் குழந்தைகளும் முதியோர்களும் கடும் சிரமத்தில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த மின் தடைக்கு காரணம் சென்னை தாம்பரம் கடப்பேரியில் துணை மின் நிலையத்தில் உள்ள பெரிய டிரான்ஸ் பார்மர் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்ததே என மின் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் உள்ள அனைத்து மின் இணைப்புகளையும் மின்சார ஊழியர்கள் துண்டித்துள்ளனர். மேலும் தாம்பரம் தீயணைப்புப்படை வீரர்கள் நுரையுடன் கூடிய ரசாயன நீரை கொண்டு நெருப்பை அணைக்கும் முயற்சியில் சில மணி நேரங்கள் ஈடுபட்டு ஒருவழியாக சற்றுமுன் தீயை முழுவதுமாக அணைத்தனர்.
 
இருப்பினும் டிரான்ஸ்பார்மர் வெடித்து சேதமடைந்ததால் தாம்பரம், சானடோரியம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர்,பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. அந்த பகுதி வழியாக  செல்லும் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது மட்டுமின்றி சென்னை விமான நிலையத்திற்கு செல்லும் மின் வினியோகமும் தடைபட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments