Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றும் மழை தான்... வானிலை ஆய்வு மையம் தகவல்!

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (10:02 IST)
ஏற்கனவே கூறியது போல தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி நேற்று செனை உட்பட பல பகுதிகளில் மழை பெய்தது.
 
இந்நிலையில் இன்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் மழையை எதிர்ப்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments