Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் 9-ம் தேதி வரை கனமழை – தமிழகத்திற்கு எச்சரிக்கை!

Webdunia
சனி, 5 நவம்பர் 2022 (09:35 IST)
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 9-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என தகவல்.


தற்போது தமிழ்நாடு முழுவதும் பருவமழை தொடங்கியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரபிரதேசம், ஒடிசா உள்ளிட்ட வங்க கடலோர மாநிலங்கள் வடகிழக்கு பருவமழையால் அதிக மழைப்பொழிவை பெற்று வருகின்றன.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடகிழக்கு பருவமழை 2023 ஜனவரி 20ம் தேதி வரை மழைப்பொழிவை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15ல் உருவாகும் காற்றழுத்தம் தமிழகத்தின் மையப்பகுதியை நோக்கி நகரும்.

தமிழகம் முழுவதும் நவம்பர் 15 முதல் 20ம் தேதி வரை இயல்பை விட அதிக மழை பொழிவு இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வெளியான அறிவிப்பில் தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 9-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

 Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments