Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளுத்து வாங்க போகும் மழை - வானிலை மையம் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (13:02 IST)
தமிழகத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. 

 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனிடையே நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்களிலும் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.  அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என  சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. அதோடு அக்டோபர் 2 ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணைய தளத்தில் பார்க்கலாம்?

கர்னல் சோபியா குறித்து சர்ச்சை கருத்து: பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்..!

இந்தியாவில் ஆப்பிள் தொழிற்சாலை அமைவதை நான் விரும்பவில்லை: டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments