Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அறிவு கெட்ட அமைச்சர்களுக்கு சவால்: தமிழன் பிரசன்னாவின் சர்ச்சை பதிவு

அறிவு கெட்ட அமைச்சர்களுக்கு சவால்: தமிழன் பிரசன்னாவின் சர்ச்சை பதிவு
, செவ்வாய், 12 நவம்பர் 2019 (22:31 IST)
திமுக தலைவர் முக ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை, மிசாவின்போது வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டார் என சமீபத்தில் ஒரு செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஓடிக்கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் திமுகவின் இளம் தலைவர்களில் ஒருவரான தமிழன் பிரச்சன்னா இதுகுறித்து தனது ஃபேஸ்புக்கில் கூறியதாவது:
 
படித்து முடித்துவிட்டேன் ஷா கமிஷனை! ஷா கமிஷனில் தலைவர் மு.க.ஸ்டாலின் பெயர் இல்லை என்று சொன்னவர்கள் அனைவரும் வரிசையில் வரவும், பெயர் மட்டும் அல்ல இன்னும் பல வரலாறுகளும் இருக்கின்றது,
 
ஷா கமிஷனில் எங்கள் தலைவர் பெயர் இல்லை என்று நிருபித்தால் நான் அரசியலை விட்டு விலக தயார், ஆனால் அப்படி நீங்கள் நிருபிக்க தவறி விட்டால் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் உங்களுக்கான தண்டனையை ..,
 
" சவால் " அறிவு கெட்ட அமைச்சர்கள் தொடங்கி அடிமுட்டாள் அ.. பி.. ஆசிரியர் வரை... வரிசையில் வரவும்.... ஷா கமிஷன் அறிக்கை வேண்டுபவர்கள் ஆவண காப்பகத்தில் சென்று படிக்க தெரிந்தால் படித்துக்கொள்ளவும்..
 
முன்னதாக ’நிருபிக்க தவறி விட்டால் அறிவாலயத்தின் கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும் அதுதான் தண்டனை’ என்று குறிப்பிட்டிருந்ததை பின்னர் திடீரென ’நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் உங்களுக்கான தண்டனையை .., என்று மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகாராஷ்டிரா: பாஜகவின் தேர்தல் வெற்றி அரசியல் தோல்வியானது எப்படி?