Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தொலைக்காட்சிகளில் பாஜக – தமிழிசை அறிவிப்பு !

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (14:07 IST)
சமீபகாலமாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறுவதைத் தவிர்த்துவந்த தமிழக பாஜக இப்போது மீண்டும் கலந்து கொள்ளும் என தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

கடந்த ஜுலை மாதம் தொலைக்காட்சி  சமநிலையும் சமவாய்ப்பும் இல்லாததால் பாஜக பிரதிநிதிகள் யாரும் இனி கலந்து கொள்ள வேண்டாம் என தமிழக பாஜக தலைமை அறிவுறுத்தியது. ஆனால் மற்ற பங்கேற்பாளர்கள் மற்றும் நெறியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் பாஜக பிரதிநிதிகள் முழிப்பதானாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விமர்சங்களும் எழுந்தன.

இந்நிலையில் இப்போது மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக நிர்வாகிகள் மீண்டும் பங்கேற்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் கலந்துகொள்வோர் பெயர்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இவர்கள் குறிப்பிடும் கருத்துகள் மட்டுமே கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்து எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு நிரந்தர தடையா? அதிர்ச்சி தகவல்..!

அரபிக்கடலில் புயல் சின்னம் ஏற்பட வாய்ப்பு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? மின்சார வாரிய அதிகாரிகள் சொல்வது என்ன?

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments