Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக எம்.பி.,களுக்கு தமிழிசை சவால்

Webdunia
திங்கள், 26 மார்ச் 2018 (14:45 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவதற்காக தமிழக எம்பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின், திருமாவளவன், அன்புமணி  உள்பட ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இதில் திமுகவுக்கு 4 எம்பிக்களும், பாமகவுக்கு ஒரு எம்பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எம்பியே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் 37 மக்களவை எம்பிக்களையும், 13 மாநிலங்களைவை உறுப்பினர்களையும் ஆக மொத்தம் 50 எம்பிக்களை வைத்துள்ள அதிமுக இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில் பாராளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, 'தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்வதாக பயமுறுத்தாமல், அதனை செயலில் காட்ட வேண்டும் என்று சவால் விடுத்துள்ளார். இந்த சவாலை திமுகவின் 4 எம்பிக்களும், பாமகவின் ஒரு எம்பியும் ஏற்றுக்கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments