Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லோர் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி கூறவில்லை - தமிழிசை பல்டி

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (12:26 IST)
கடந்த நாடாளுமன்ற தேர்தலிலின் போது, இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்டு மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் எனக் கூறியிருந்தார்.


 

 
ஆனால், தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மோடி பிரதமரானார். ஆனால், அவர் கூறியபடி கருப்புப் பணத்தை மீட்கவும் இல்லை. மக்கள் கணக்கில் இதுவரை பணம் செலுத்தவும் இல்லை.
 
இந்த விவகாரம் குறித்து சமூக வலைத்தளங்கள் மட்டுமில்லாமல், பல தேசிய அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,  வெளிநாட்டில் கறுப்பு பணம் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் போடும் அளவிற்கு பதுக்கப்பட்டுள்ளது. அதனை மீட்டு வருவோம் என்றுதான் மோடி கூறினர். இந்த உரையை திரித்துக்கூறி உங்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் 15 லட்சம் போடுவதாக மோடி சொன்னாரே என பொய்ப்பிரச்சாரம் செய்யும் 2ஜி ஊழல் விஞ்ஞானிகள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அதாவது, 2ஜி வழக்கில் சிக்கிய காங்கிரஸ் மற்றும் திமுகவினர்தான் இந்த பொய்ப்பிரச்சாரத்தை செய்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments