Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் தேதி அறிவிப்பு; இன்றே முடிகிறதா சட்டப்பேரவை கூட்டம்?

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (14:35 IST)
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் இன்றே சட்டமன்ற கூட்டம் முடிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் பட்ஜெட் மீதான இரண்டாவது நாள் விவாத கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட முடியாது என்பதால் இன்றுடன் சட்டமன்ற கூட்டம் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இன்று பிற்பகல் 3 மணிக்கு சட்டமன்ற கூட்டம் மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னர் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments