Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பெண்களுக்கு மாதம் ரூ.1000! ஆனால் இவங்களுக்கு மட்டும்தான்..! – லிஸ்ட் தயார் செய்யும் குழு!

அரசு ஊழியர்களின் 6 நாள் சம்பளம் பிடித்தம்
, திங்கள், 13 மார்ச் 2023 (11:38 IST)
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை அமல்படுத்த பட்டியல் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

கடந்த 2021ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக அளித்த வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம். திமுக ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு கடந்து விட்ட நிலையில் இந்த திட்டம் இன்னும் அமலுக்கு வராததை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் தற்போது மாதம் ரூ.1000 பெறுவதற்கு தகுதியானவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மகளிர் மேம்பாட்டு கழகம், ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் உள்ள ஏஜென்சி மூலமாக தமிழ்நாட்டில் வறுமை கோட்டில் உள்ள ஏழைகள் எவ்வளவு இருக்கின்றனர் என்ற கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சொந்த வீடு இல்லாதவர்கள், தினசரி கூலி வேலை பார்க்கும், மாத வருமானம் இல்லாத பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட மற்றும் கணவனை இழந்த பெண்கள் ஆகியோரது பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகிறது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ரேசன் அட்டைதாரரகள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா அட்டைதாரர்களின் பட்டியலும் மாதம் ரூ.1000 பெறுவதற்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது. என்றாலும் இதில் கணவரின் ஆண்டு வருமானம் கணக்கில் எடுக்கப்பட்டு அதன்பேரில் அவர்கள் ரூ.1000 பெற தகுதியுடையவர்களா என்பது முடிவு செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்புளுயன்சா காய்ச்சல்: தமிழகத்தில் முதல் உயிரிழப்பு