Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் மொழியைக் கற்றுவருகிறேன்… தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி பேச்சு!

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2023 (10:09 IST)
தமிழக ஆளுநர் ரவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகம் என்று பேசியது பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஜனவரி 4ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாச்சார தொடர்பை கொண்டாடும் விழாவில் காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே தொடர்பை குறிப்பிடவே தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன் என்றும் அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு என்பது இல்லை என்பதால் தமிழகம் என்ற வார்த்தையை நிகழ்ச்சிக்காக பயன்படுத்தினேன் என்றும் கூறினார்.

எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ அனுமானம் செய்வதோ தவறானது என்றும் எதார்த்தத்திற்கு புறம்பானது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையடுத்து தற்போது ஆளுநர் மாளிகையில்  பயிற்சியில் உள்ள இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் 44 பேரிடம் உரையாற்றிய போது “தமிழ்நாட்டில் பணியாற்றியது மூலம் நான் பல விஷயங்களை தெரிந்துகொண்டேன். தொடர்ந்து தமிழ் மொழியைக் கற்று வருகிறேன்” எனப் பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தை தொடும் பூண்டு விலை! - மக்கள் அதிர்ச்சி!

போலீசாரிடம் பிடிபடாமல் இருக்கும் நடிகை கஸ்தூரி.. முன் ஜாமீனுக்கு முயற்சியா?

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்படுவாரா ஹசீனா? இன்டர்போல் உதவியை நாடும் வங்கதேசம்

இரண்டாவது மனைவியை 8 துண்டுகளாக வெட்டி வீசிய கணவன்! - திருவண்ணாமலையை உலுக்கிய சம்பவம்!

இனி காத்திருக்க தேவையில்லை.. சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சூப்பர் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments