Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் வெங்காயம் ரூ.45க்கு கிடைக்கும்! – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (11:50 IST)
தமிழகத்தில் வெங்காய வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ள நிலையில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கனமழை காரணமாக வெங்காய சாகுபடி குறைந்துள்ளதால் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களின் காய்கறி சந்தைகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.100 க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.120க்கும் விற்பனையாகி வருகிறது. முன்கூட்டிய நடவடிக்கை எடுத்த மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.

கடந்த முறை வெங்காயம் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ, நாளை முதல் அரசு பசுமை மையங்களில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.45க்கு விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், நாளை முதல் மக்கள் பசுமை மையங்களில் குறைந்த விலையில் வெங்காயம் வாங்கி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments