Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றும், நாளையும் பல மாவட்டங்களில் கனமழை? – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (08:32 IST)
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும், நாளையும் கனமழை தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் 26ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments