Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொளுத்தும் வெயிலில் குளுகுளு மழை! – 11 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு!

Webdunia
ஞாயிறு, 24 மே 2020 (13:06 IST)
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக 11 மாவட்டங்களில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அம்பன் புயல் வங்கதேசம் அருகே கரையை கடந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளது, இதனால் மக்கள் மதிய வேளைகளில் வெளியே வருவதை தவிர்க்கவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது, இந்நிலையில் தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி, தேனி, தென்காசி கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதேசமயம் திருச்சி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் நாமக்கல் பகுதிகளில் 104 முதல் 108 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தலைவர் சுட்டு கொலை.. இந்தியாவில் பல குண்டுவெடிப்பில் தொடர்பு..!

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments