Publish Date: Thu, 28 Apr 2022 (09:32 IST)
Updated Date: Thu, 28 Apr 2022 (09:34 IST)
சென்னை ஐஐடியில் தமிழ் தாய் வாழ்த்து பாட அனுமதிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது அது நிறைவேறியுள்ளது
சென்னை ஐஐடியில் அரசு நிகழ்ச்சியின்போது தேசிய கீதம் மற்றும் வந்தேமாதரம் ஆகியவற்றுடன் தமிழ் தாய் வாழ்த்து பாடலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது
இதுகுறித்து விரைவில் சென்னை ஐஐடி அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்படும் என கல்வி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
சென்னை ஐஐடியில் தமிழ் தாய் வாழ்த்து பாடலாம் என்ற மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது