Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்லாமிய கைதிகள் விவகாரம்: முதலமைச்சர் பதில் ஏமாற்றமளிப்பதாக தமிமுன் அன்சாரி பேட்டி..!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (15:46 IST)
இஸ்லாமிய கைதிகள் விவகாரத்தில் முதலமைச்சர் பேச்சு தனக்கு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக தமிமுன்  அன்சாரி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பாஜக விலகியவுடன் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க இஸ்லாமிய அமைப்புகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது. குறிப்பாக தமிமுன் அன்சாரி, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சட்டமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அவர் கேட்டுக் கொண்டபடியே எடப்பாடி பழனிச்சாமி தீர்மானம் கொண்டு வந்த நிலையில் இந்த தீர்மானத்திற்கு பதிலளித்த தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இஸ்லாமிய கைதிகள் விவகாரத்தில்  பட்டியல் எடுக்கப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆளுநரின் ஒப்புதல் கிடைத்ததும் விடுதலை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆனால் இந்த பதில் தனக்கு தமிமுன் அன்சாரி ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுதலை தொடர்பான விவாதத்தில் தங்கள் அரசின் மீது உள்ள தார்மீக கடமையை தட்டிக் கழித்துவிட்டு ஆளுநரை கை காட்டுவது மடைமாற்றம் முயற்சியாகும் என்றும்  அவர் கூறினார்

மேலும் நாளை திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும் என்றும் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேசன் சிந்தூர் எதிரொலி: இந்திய விமான சேவைகள் ரத்து.. முழு விவரங்கள்..!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி.. நீதி நிலைநாட்டப்பட்டது: இந்திய ராணுவம் அறிவிப்பு..!

‘ஆபரேஷன் சிந்தூர்’.. பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்.. போர் தொடங்கிவிட்டதா?

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

அடுத்த கட்டுரையில்
Show comments