Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைதி லெப்ட்ல போ … பிகில் ரைட்ல போ – 455 கோடி அள்ளிய டாஸ்மாக் !

Webdunia
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (10:03 IST)
தீபாவளிப் பண்டிகையை ஒட்டி 3 நாட்களில் 455 கோடி ரூபாய்க்கு மதுபானங்களை டாஸ்மாக் விற்பனை செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் 5000 டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது. அரசுக்கு வருமானம் அளிக்கக்கூடிய துறைகளில் இப்போது டாஸ்மாக் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. சாதாரண நாட்களில் டாஸ்மாக் மூலம் சராசரியாக 70 கோடி ரூபாய் அளவுக்கும் பண்டிகை நாட்களில் அதை விட 30 முதல் 50 சதவீதம் அதிகமாகவும் வருமானம் டாஸ்மாக் மூலம் கிடைத்து வருகிறது. தமிழக அரசுக்கு வருவாய் அளிக்கும் முக்கியமான துறையாக டாஸ்மாக் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்களில் மட்டும் 455 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது. வெள்ளிக்கிழமை 100 கோடி ரூபாயும், சனிக்கிழமை 183 கோடி ரூபாயும், ஞாயிற்றுக்கிழமை 172 ரூபாயும் விற்பனை ஆகியுள்ளது. இந்த ஆண்டு இலக்காக 360 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால் அதை 95 கோடி ரூபாய் அதிக வியாபாரம் நடந்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின் போது 325 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments