Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் 3 நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடல்: குடிமகன்கள் திண்டாட்டம்

Webdunia
வெள்ளி, 11 அக்டோபர் 2019 (07:52 IST)
சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு இன்று வருகை தரும் நிலையில் சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடு, மாமல்லபுரம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, மீனவர்கள் மீன்பிடிக்க தடை, சுற்றுலா பயணிகள் தடை என கட்டுப்பாடு நீண்டுகொண்டே போகிறது
 
இந்த நிலையில் மாமல்லபுரத்தில் அரசு மதுபானக் கடைகள் இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்களுக்கு திண்டாட்டம் என்றே கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி மகாபலிபுரம் சாலையில் உள்ள அனைத்து திரையரங்க வளாகங்களும் இன்றும் நாளையும் காட்சிகள் கிடையாது என்றும், பெரும்பாலான ஓட்டல்கள் மூடப்படும் என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படும் என தெரிகிறது
 
மேலும் சீன அதிபர் இன்று சென்னை வரும்போது, தேவைப்பட்டால் கிண்டி வழித்தடத்தில் சிறிதுநேரம் ரயில்கள் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது தெரிந்ததே. புறநகர், விரைவு ரயில்களை பல்லாவரம் பகுதியில் சிறிது நேரம் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வேளச்சேரி - கடற்கரை செல்லும் பறக்கும் ரயில்களும் தேவைப்பட்டால் சிறிது நேரம் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மொதத்தில் ஓ.எம்.ஆர் சாலை இன்றும் நாளையும் வெறிச்சோடி இருக்கும் என்பது மட்டும் உண்மை

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments