Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒருத்தருக்கு இவ்ளோதான் சரக்கு விக்கணும்!. டாஸ்மாக்கில் கட்டுப்பாடு!...

Advertiesment
tasmac
தமிழகத்தில் மதுபான கடைகளை டாஸ்மார்க் நிறுவனம் என்கிற பெயரில் தமிழக அரசே நடத்தி வருகிறது. இந்த டாஸ்மாக்கில் பல கோடி வருமானம் அரசுக்கு வருவதால் அதை தனியார் மயமாக்கும் எண்ணத்தை அரசு கைவிட்டு விட்டது.

டாஸ்மாக்கால் பல குற்றங்கள் நடக்கிறது. பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள். எனவே, மதுபானக்கடைகளை இழுத்து மூட வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்தாலும் அரசு அதை கண்டு கொள்வதில்லை. ஒரு பக்கம் டாஸ்மார்க்கில் பல ஊழல்களும் நடப்பதாக அடிக்கடி செய்திகளும் வெளியாவதுண்டு..

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் டாஸ்மாக்கில் பல கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தேர்தல் ஆணையம் சில கட்டப்பாடுகளை விதித்தது. இந்நிலையில், புதிய கட்டுப்பாட்டை டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

அதன்படி ஒரு தனி நபருக்கு அதிகபட்சம் 4.5 லிட்டர் வரை மட்டுமே மதுபானம் கொடுக்க வேண்டும். அதிகபட்சமாக 7.8 லிட்டர் பீர், 9 லிட்டர் ஒயின் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். ஒரு நபருக்கு அதிகபட்சம் 12 பீர் மட்டுமே விற்கலாம். தனி நபர்களுக்கு மொத்தமாக விற்பனை செய்வது சட்டவிரோதம்’ என டாஸ்மார்க் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருக்கும் வரை டாஸ்மாக்கில் மது விற்பனைக்கு கட்டுப்பாடு தொடரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துரந்தர் 2-வால் பாகிஸ்தானில் பீதி!.. தெருதெருவாக உளவாளிகளை தேடும் போலீஸ்!...