Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று முதல் டாஸ்மாக் கடைகளை திறக்கமாட்டோம்!.. ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு...

Advertiesment
tasmac
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் தொடர்பாக பல அறிவிப்புகள் வெளியானது. குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் கடைகளை திறந்துவைக்கக் கூடாது, கள்ளச் சந்தையில் மது விற்கக் கூடாது, மது பாட்டிலை கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது என பல கெடுபிடிகளையும் தமிழக அரசு காட்டியது.

ஆனால் அதையும் மீறி தமிழகத்தில் பல கடைகளிலும் பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதற்கு குடிமகன்கள் எதிர்ப்பு தெரிவிப்பது, டாஸ்மாக் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்வது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான நிறைய வீடியோக்களும் சமூக வலைதளங்களில் ஏற்கனவே வெளியானது..

ஒருபக்கம் காலி மதுபானங்களை திரும்ப பெரும் திட்டத்தை தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வந்தது. அதுவும் தற்போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. ஏனெனில் பாட்டிலுக்காக நாங்கள் பத்து ரூபாயை சேர்த்து வாங்குகிறோம்.. அதையும் கூடுதல் கட்டணமாக நினைத்து வாடிக்கையாளர்கள் எங்களிடம் சண்டை போடுகிறார்கள்.. எனவே காலி மது பாடல்களை திரும்ப பெறுவதை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

நேற்று சென்னையில் 1500 கடைகள் மூடப்பட்டு அந்த கடைகளில் பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்கள் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று திருப்பூரில் இன்று முதல் டாஸ்மார்க் கடைகள் காலவரையற்ற அடைப்பு என அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவதை நிறுத்துவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதாக ஊழியர்கள் கூறியிருக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேலும் 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய திட்டமா? மொத்தம் 10 எம்.எல்.ஏக்கள் விலகுவார்கள் என கணிப்பு..!