Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீலகிரியை அடுத்து தென்காசியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (08:43 IST)
நீலகிரி மாவட்டத்திலுள்ள நான்கு முக்கிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.
 
இந்த நிலையில் நீலகிரியை அடுத்து தென்காசி பகுதியில் சில கனமழை பெய்து வருவதை அடுத்து அந்த மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
 
தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், கடையம், கீழ்பாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கன மழை காரணமாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
இந்த விடுமுறைக்கு பதிலாக வேறு ஒரு நாளில் இந்த பகுதிகளில் பள்ளிகளுக்கு வேலை நாளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேரில் ஆஜராகாவிட்டால்?... அமைச்சர் மா சுப்பிரமணியனுக்கு சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை.

நாளை நாடு முழுவதும் போர் ஒத்திகை.. தமிழகத்தில் எங்கே? தலைமை செயலகத்தில் ஆலோசனை..!

2 அணைகள் முழுவதும் மூடல்! பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்தியது இந்தியா!

இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம்.. புதிய தேதி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments