Publish Date: Wed, 17 Jun 2026 (13:22 IST)
Updated Date: Wed, 17 Jun 2026 (13:27 IST)
தவெக நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது 2021 திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் தமிழகத்தின் கடன் 4.8 லட்சம் கோடியாக இருந்ததாகவும். திமுக ஆட்சியில் இருந்த கடந்த 5 காலத்தில் அது இரு மடங்காக உயர்ந்து விட்டது. தற்போது தமிழகத்தின் மொத்த கடன் 13.18 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது எனவும் கூறியிருந்தார்.
இதனால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் தலையிலும் 1.28 லட்சம் கடன் இருப்பதாக அவர் கூறினார். இது தமிழகத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. இந்நிலையில் தற்போது செய்தியாளர்களிடம் இதுபற்றி விளக்கமளித்த திமுக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டு தவெக அரசு தப்பிக்க பார்க்கிறது.. வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டோம் என்பதை மறைமுகமாக வெள்ளை அறிக்கை மூலம் சொல்கிறார்கள். திமுகவை அறிவித்த திட்டங்களை தவெக நிறுத்த பார்க்கிறது.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில்தான் தமிழகத்தின் கடன் இரண்டு மடங்காக உயர்ந்தது. அதேபோல் ஒரு ஆட்சி முடியும்போது முந்தைய கடனை ஒப்பிடும் போது அது இரண்டு மடங்காக அதிகரிப்பது என்பது வழக்கமான ஒன்றுதான். நான் தவெகவுக்கு சவால் விடுகிறேன். தவெக ஒருவேளை 5 ஆண்டுகள் ஆட்சியை நடத்தி திமுக அறிவித்துள்ள திட்டங்களை நிறைவேற்றி, உங்களின் திட்டங்களையும் நிறைவேற்றி, திமுக வாங்கியதை விட குறைவான கடனை வாங்கி ஆட்சியை நடத்தி முடித்து விட்டால் நான் பொறுப்பிலிருந்து விலகி விடுகிறேன்.
இன்னும் 5 ஆண்டுகளில் பின் தவெக ஆட்சி முடியும் போது தமிழகத்தின் கடன் 20 லட்சம் கோடியாக இருக்கும் எனவும் அவர் கூறியிருக்கிறார். மேலும், தவெக தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவே 6 லட்சம் கோடி கடன் தேவைப்படும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.