Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டு போட்ட முதியவர் மயங்கி விழுந்து பலி! – தஞ்சாவூரில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (12:23 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வாக்கு செலுத்த வந்த முதியவர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கும் நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் வாக்குச்சாவடிக்கு வரும் மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகளை வரிசையில் காத்திருக்க செய்யாமல் உடனடியாக வாக்கு செலுத்தவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பாபநாசம் தொகுதிகுட்பட்ட அய்யம்பேட்டை பகுதியில் வயதான அர்ஜுனன் என்ற முதியவர் வாக்கு செலுத்த வந்துள்ளார்.

வாக்கு செலுத்தி விட்டு திரும்புகையில் வாக்குசாவடியிலிருந்து சிறிது தூரம் சென்றதுமே அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக பொதுமக்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments