Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பருவ நெற்பயிர்களை காப்பீட்டு செய்ய வரும் 15 ஆம் தேதி கடைசி நாள் !

பருவ நெற்பயிர்களை காப்பீட்டு செய்ய  வரும் 15 ஆம் தேதி கடைசி நாள் !
, சனி, 5 நவம்பர் 2022 (15:00 IST)
பருவ நெற்பயிர்களை வரும் 15 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டுமென உழவர் நலத்துறை விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஆண்டுதோறும் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர்காப்பீடு செய்யுமாறு தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. மழை காரணமாக பயிர் சேதமானாலும் காப்பீடு மூலம் இழப்பீடு பெற முடியும் என்பதால் காப்பீடு செய்ய வலியுறுத்தப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில்  வரும்  நவம்பர் 15 ஆம் தேதிக்குள் சம்பா, பிசானப் பருவ பயிர்  நெற்பயிர்களை காப்பீடு செய்துகொள்ள வேண்டுமென உழவர் நலத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

அதில், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை , திருவாரூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், வரும்  நவம்பர் 15 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என்றும், கன்னியாகுமரி, திண்டுக்கல், விருது நகர் தென்காசி, நெல்லை, ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வரும் டிசம்பர்15 ஆம் தேதி கடைசி நாள் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.2 ஆம் போக நெல்சாகுபடி சற்றுத் தாமதமாகத் தொடங்கப்பட்டதால்,  6 மாவட்டங்களுக்கு டிசம்ம்பர் 15 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லவ் டுடே விமர்சனம் - 'கோமாளி' பட இயக்குநரின் நடிப்பு எப்படி?