Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது ஜனநாயகப் படுகொலை - சீமான்

பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது ஜனநாயகப் படுகொலை - சீமான்
, சனி, 23 நவம்பர் 2019 (19:31 IST)
இன்று பாஜகவின் ஃபட்நாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுள்ளது அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மராட்டியத்தில் பாஜக ஆட்சியைப் கைப்பற்றியுள்ளது ஜனநாயகப் படுகொலை என சீமான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜக கூட்டணிக்கு( பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆளுநர் அனுமதி அளித்த விவகாரம் தொடர்பாக  ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரி காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங். கூட்டாக உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. 
 
மேலும், ஆளுநரின் முடிவு அரசமைப்பு சாசனத்துக்கு எதிரானது என சிவசேனா விமர்சித்துள்ளது.அதனால் மஹாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :
 
அதிகாரப்பலத்தைக் கொண்டு தனது எதேச்சதிகாரப்போக்கின் மூலம் மராட்டியத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியிருப்பது மாபெரும் சனநாயகப்படுகொலை என சீமான் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தையின் சடலத்தை தர மறுத்த இந்தோனீஷிய மருத்துவமனை: மீட்டு வந்த டேக்சி ஓட்டுநர்கள்