Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உல்லாசத்துக்கு வர மறுத்த கள்ளக்காதலி.! ஆபாச வீடியோவை வெளியிட்ட கள்ளக்காதலன்..!

Senthil Velan
சனி, 4 மே 2024 (15:35 IST)
உல்லாசத்துக்கு வர மறுத்ததால் கள்ளக்காதலியின் ஆபாச வீடியோவை கள்ளக்காதலன் வெளியிட்ட சம்பவம் அரியலூர் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா(35). தனியார் வங்கி ஊழியராக பணியாற்றி வரும் இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கடன் தொகையை வசூலிக்க சென்ற இடத்தில் திருமணமான 39 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. 
 
அந்த பெண்ணின் கணவர் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அந்த பெண்ணை சிவா வழக்கம்போல உல்லாசத்துக்கு அழைத்தபோது மறுத்துவிட்டார். 
 
இதனால் ஆத்திரமடைந்த சிவா ஏற்கனவே அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது எடுத்த வீடியோவை தனது நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார். அவரது நண்பர்களில் ஒருவர் இந்த வீடியோவை சென்னையில் உள்ள அந்த பெண்ணின் கணவருக்கு அனுப்பியதாக சொல்லப்படுகிறது.

ALSO READ: பாலியல் வழக்கில் சிக்கிய ரேவண்ணாவை காப்பாற்றுகிறது மத்திய அரசு ..! கர்நாடக முதல்வருக்கு ராகுல் காந்தி கடிதம்..!

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் கணவர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பெண்ணின் ஆபாச வீடியோவை வெளியிட்ட தனியார் வங்கி ஊழியர் சிவாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்