பிரபல உணவு டெலிவரி ஆப் மூலம் ஆர்டர் செய்த மட்டன் பிரியாணியில் பாதியளவுதான் வந்ததாக ஒருவர் குற்றஞ்சாட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இன்றைய சுழலில் பலரும் செல்போன்ல் உணவு டெலிவரி செயலி மூலம் தங்களுக்குப் பிடித்தமான உணவை ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர்.
உணவை செயலி மூலம் ஆர்டர்செய்த சில நிமிடங்களில் உணவு ஆர்டர் செய்த பயனருக்கு கிடைத்து விடும்.
இதற்காக டெலிவரி வேலையில் ஆயிரக்கணக்கானோர் பிரபல உணவு டெலிவர் ஆப் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை புது பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், பிரபல உணவு விநியோக செயலி மூலம் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்ததாகவும், ஆனால் அதில் பாதியளவு பிரியாணிதான் இருந்ததாக கூறி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
உணவு டெலிவரி செய்த ஊழியர் பாதியை சாப்பிட்டுவிட்டு டெலிவரி செய்ததாகவும், டெலிவரி ஊழியரிடம் கேட்டதற்கு அவர் மிரட்டும் தொனியில் பேசியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.