Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீ இல்லைனா நான் செத்திடுவேன்!: நாட்டு வெடிக்குண்டை கழுத்தில் மாட்டி வந்த கணவர்

Webdunia
புதன், 25 செப்டம்பர் 2019 (20:42 IST)
மனைவியை பிரிந்து வாழ்ந்த மணிகண்டன் என்பவர் கழுத்தில் நாட்டு வெடிக்குண்டை மாட்டி கொண்டு மனைவி முன்னரே சென்று தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. அடிக்கடி மணிக்கண்டன் தனது மனைவியோடு சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் மன விரக்தியடைந்த அவர் மனைவி குழந்தைகளை அழைத்து கொண்டு தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

பல மாதங்களாக மனைவியின் பிரிவில் வாடிய மணிக்கண்டன் கழுத்தில் நாட்டு வெடிகளை சுற்றி கொண்டு, பெட்ரோல் கேனையும் எடுத்து கொண்டு மனைவியின் வீட்டிற்கே சென்று விட்டார். அவரை அந்த கோலத்தில் பார்த்த வர் மனைவி திடுக்கிட்டார். ஆனால் மணிகண்டனோ “நீ பிள்ளைகளை அழைத்து கொண்டு என்னோடு வா! இல்லையேல் நான் உன் கண் முன்னாலேயே வெடித்து இறந்து போவேன்” என்று மிரட்டியிருக்கிறார்.

இதுபற்றிய தகவல் தெரித்து அங்கு விரைந்த காவல் துறையினர் அவரை சமாதானம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.ஸ் ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்வதில் பிடிவாதமாக இருந்திருக்கிறார். பிறகு அவரது குழந்தைகளை காட்டி “இவர்களுக்காகவாவது சாகாமல் இருக்க வேண்டும்” என போலீஸார் நைஸாக பேசியுள்ளனர். மனமிறங்கிய மணிகண்டன் தன் முடிவை கைவிட்டார். போலீஸார் அவர் கழுத்தில் இருந்த நாட்டு வெடிக்குண்டுகளை அகற்றினர்.

அப்போது தான் ஏற்கனவே விஷம் அருந்திவிட்டுதான் இங்கு வந்ததாக மணிகண்டன் கூறியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த போலீஸார் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு மணிகண்டன் உயிர் பிழைத்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments