Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டின் ஒரே எலும்பு முறிவு டாக்டர் வேட்பாளர்.. கனிமொழி தொகுதியில் ஒரு கலகல பிரச்சாரம்..!

Siva
வியாழன், 11 ஏப்ரல் 2024 (08:29 IST)
தமிழ்நாட்டின் ஒரே எலும்பு முறிவு டாக்டருக்கு படித்த வேட்பாளர் என கனிமொழி போட்டியிடும் தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளரை முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிமுகம் செய்து வைத்த தேர்தல் பிரச்சாரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி தொகுதியில் சிட்டிங் எம்பி கனிமொழியை எதிர்த்து அதிமுக சார்பில் சண்முகநாதன் என்பவர் போட்டியிடுகிறார். சமீபத்தில் கோவில்பட்டியில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்ட நிலையில் மாபா பாண்டியராஜன் கலகலப்பாக பேசினார்.

கனிமொழி சென்னையை சேர்ந்தவர், அவர் அவ்வப்போது தான் தூத்துக்குடிக்கு வந்து செல்வார், ஆனால் சண்முகநாதன் மண்ணின் மைந்தர், அவர் வெற்றி பெற்றால் தொகுதிக்குள்ளே தான் இருப்பார் என்று தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் போட்டியிடும் ஒரே எலும்பு முறிவு டாக்டர் சண்முகநாதன் தான் என்றும் அவர் ஒரு லட்சம் பேருக்கு மேல் எலும்பு முறிவு சிகிச்சை செய்தவர் என்றும் இவர் தொட்டாலே போதும் எலும்பு முறிவு நோய் குணமாகிவிடும் தெரிவித்தார்.

அதேபோல இவரை நீங்கள் எம்பி ஆக்கி டெல்லிக்கு அனுப்பி வைத்தால் தூத்துக்குடியும் குணமாகும் என்று கலகலப்பாக பேசியது வாக்காளர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது .

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமர் புராண கதாப்பாத்திரமா? இந்துக்களை அவமதிக்கிறார் ராகுல்காந்தி! - பாஜக கண்டனம்!

அமெரிக்காவுக்கு வெளியே படம் எடுத்தால் 100 சதவீதம் வரி! - ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஹாலிவுட்!

ஐபிஎல் பார்த்தேன்! வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார்! - புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

திமுக பொதுக் கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பித்த ஆ ராசா..!

அடுத்த கட்டுரையில்
Show comments